Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட விஸ்வநாதபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மேகராஜ் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி குடும்ப பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தந்தை வீட்டுக்குச் சென்றார். மனைவியை சமாதானம் செய்வதற்காக மேகராஜ் அண்மையில் அவரது வீட்டுக்குச் சென்றார். அங்கு மேகராஜை மனைவியின் பெற்றோர், உறவினர்கள் அடித்து விரட்டினராம். இதுகுறித்து நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் மேகராஜ் புகார் செய்தார். இவரது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இவரை காவல் துறையினர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை மேகராஜ் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த காவல் துறையினர் விரைந்து வந்து மேகராஜை மீட்டு, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை, விசாரணை செய்வதற்காகத் தமிழ் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!