Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சாலிய மங்களம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சாலிய மங்களம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மா பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் வழங்கினார். இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாலிய மங்களம் சக்தி சிவக் குமார், பள்ளியூர் நாகராஜ் உட்பட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!