Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை மாவட்டத்தில் 2 வட்டாரத்தில் அமைக்கப்பட்ட வானவில் மையம் …. கலெக்டர் தகவல்…

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வட்டாரத்தில் வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது.. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக புத்தாக்கத் திட்டத்தின்கீழ் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு வட்டாரங்களில் பாலின வள மையம் “வானவில் மையம்” அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையமானது வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. இம்மையம் குடும்ப வன்முறை மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரத்யேகமான அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இம்மையம் தஞ்சாவூர் வட்டாரத்தில் வட்டார சேவை மையத்திலும், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் ஆலடிக்குமுனை கிராம சேவை மையத்திலும் செயல்பட்டு வருகிறது. இந்த பாலின சேவை மையத்தினை பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெனர் குழந்தைகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாளர்களை தொடர்பு கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!