Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி, கேஎம்ஏ உடையார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (46). தஞ்சை அருகே பொய்யுண்டார்கோட்டை அரசு பள்ளி ஆசிரியை.

நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் மகேஸ்வரி தன் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது வீட்டு பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்து கண்டு அதிச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல் தஞ்சாவூர் விளார்ரோடு, நியூபாத்திமா நகரை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி சுமதி (46). தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியர். இவர் வீட்டைபூட்டி விட்டு நேற்று முன்தினம் வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தஞ்சையில் ஒரே நாளில் நடந்த இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் தமிழ்ப் பல்கலைக் கழக போலீசார் மற்றும் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!