Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்.

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் திரௌபதி அம்மன் எழுந்தருளி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க தொடர்ந்து நடைப்பெற்ற தீ மிதி திருவிழா நடைபெற்றது விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் சாத்தினர். மேலும் அங்கு கூடியிருந்த சுமங்கலி பெண்கள் திரௌபதி அம்மனை வேண்டி மாவு விளக்கு ஏற்றி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை உமையாள்புரம் கிராமவாசிகள் மற்றும் நாட்டாமைகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!