Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் (தென்னூர்) பருத்தி மறைமுக ஏலம் நடைப் பெற்றது. பருத்தி மறைமுக ஏலத்திற்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் தாமஸ் மற்றும் பிரசாத் முன்னிலை வகித்தனர். பருத்தி மறைமுக ஏலத்தில் தென்னூர், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 127 விவசாயிகள் சராசரியாக 198 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம்,தேனி, திருப்பூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சார்ந்த 8 வணிகர்கள் கலந்துக் கொண்டு அதிக பட்சம் ரூ.6799, குறைந்த பட்சம் ரூ.6389, சராசரி ரூ.6609/- என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தியின் மதிப்பு சராசரி ரூ 13 லட்சம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!