Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்த நபர் கைது..

தஞ்சை அருகே வல்லம், திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, குரும்பூண்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி., நித்யா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் வல்லம்- திருமலைசமுத்திரம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மூட்டைகளுடன் பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஆபிரகாம் மகன் ஆண்ட்ரோஸ் (34) என்பதும், வல்லம், திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கால்நடை தீவனத்திற்காக கொண்டு சென்றதும் போலீசார் தெரிய வந்தது.

மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் திருமலைசமுத்திரத்தில் அவர் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்ட்ரோஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!