Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

தஞ்சை அடுத்த களிமேடு பரிசுத்தம் நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் குமார் (50). இவர் வீட்டில் இருந்து தஞ்சைக்கு தனது பைக்கில் வந்தார். பின்னர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தும் பைக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் குமார் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!