Skip to content

தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

தஞ்சை விளார் சாலை தில்லைநகரை சேர்ந்தவர் ராகவேந்திரன் (33). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தஞ்சை மேரீஸ் கார்னர் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர் ராகவேந்திரனிடம் பணம் பறிக்கும் நோக்கில் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.500-ஐ பறித்து சென்றார். இது குறித்து ராகவேந்திரன் தஞ்சை தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராகவேந்திரனிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றது அண்ணாநகரை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருந்த பள்ளி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!