தஞ்சை மாநகரில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் அருள்மிகு திரெளபதை அம்மன் ஆலய தீமிதி திருவிழா வான வேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
ஏராளமான பக்தர்கள் குழந்தைகளை சுமந்து தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி கொண்டார்கள்.
தஞ்சை மாநகர் கீழவாசல் பகுதியில் அருள்மிகு திரெளபதை அம்மன் ஆலயம் அமைந்து உள்ளது
மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆடி மாதம் காளி வீதி உலா தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்
கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் ராமர் கிருஷ்ணர் மகாபாரதம் உபன்யாசம் நடைப்பெற்று வந்தது.
15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் காளி வீதி உலாவை தொடர்ந்து முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா ஆடி மாதம் 18ம் தேதி நடைபெறும்
அதன்படி இன்று வடவாறு கரையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அங்கு மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் அஸ்த்ர தேவர் கரகம், பூசாரி பம்பை இவர்களை தொடர்ந்து ஆண்கள் பெண்கள் கைக்குழந்தைகளுடன் பக்தர்கள் வரிசையாக இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி கொண்டனர்.
வான வேடிக்கையுடன் நடைப்பெற்ற இவ்விழாவை ஏராளமானவர்கள் கண்டு வழிப்பட்டனர்.
