Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் திடீர் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

தஞ்சை உட்பட 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வல்லம், ஆலக்குடி, கரம்பை உட்பட சுற்றுப்பகுதியில் மிதமான மழை பெய்தது. விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மழை மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் குறைந்த அளவே தற்போது திறந்து விடும் நிலையில் பாசனத்திற்கு போதுமான தண்ணீர் இன்றி விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். தற்போது இந்த மழை பயிர்கள் வளர உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே தஞ்சை மாவட்டத்தில் வெயில் வெளுத்தெடுத்து வந்த நிலையில் இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்களும் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!