தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். வரும் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், தேர்தல் பிரசாரம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த முக்கிய விவகாரங்கள் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

