Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய அரசு ரூ.350 கோடி நிதியை தர வேண்டும்.. திருச்சி எம்பி துரை வைகோ

திருச்சி எம்பி துரை வைகோ இன்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

திருச்சி மாநகரப் பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை நேற்று ஆய்வு செய்துள்ளேன். மாரிஸ் ரயில்வே மேம்பால பணிகள் ஆகஸ்டில் முடியும் என தெரிவித்தனர். ஆனால் தற்போது பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் வரும் செப்டம்பர் மாதம் முடிவடையும் என தெரிவித்துள்ளனர் .அரிஸ்டோ மேம்பால பணிகள் ஜூன் மாதம் நிறைவடையும் என தெரிவித்திருந்தனர். அந்தப் பணிகளும் வரும் டிசம்பர் மாதம் நிறைவடையும் என தெரிவித்துள்ளனர். மேலும் காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடித்து, பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அறிவுறுத்தியுள்ளேன்.

திருச்சி – திருப்பதிக்கு பகல் நேர ரயில் சேவை வழங்க வேண்டும் என ஒன்றிய அமைச்சகத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன். அதன் அடிப்படையில் திருப்பதி – குண்டூர் வரையிலான ரயில் சேவையை திருச்சி வரை நீட்டித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி சர்வதேச விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளது. விரிவாக்க பணிகளை மேற்கொள்வதற்காக ₹.350 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான நிதி எப்போது கிடைக்கும் என எந்த பதிலும் இன்னும் வரவில்லை. ஒன்றிய அரசும், இந்திய விமான அமைச்சகமும் மேற்குறிப்பிட்ட நிதியை விரைந்து வழங்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடி வரலாம் என ராகுல் காந்தி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு

மேற்காசிய பகுதிகளில் நடக்கும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எல்பிஜி, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. நான்காவது முறையாக தற்போது விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்துள்ளது. காய்கறி விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் பொழுது, பணவீக்கம் ஏற்படும்.
இந்த பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்திருக்க வேண்டும்.
இப்படியே போனால் ராகுல் காந்தி கூறியது போல பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலையும் ஏற்படலாம் என தெரிவித்தார்.

பேட்டின் போது மதிமுக துணை பொது செயலாளர் டாக்டர் ரொகையாக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!