முதல்வர் விஜயை பாராட்டியதாக வெளியான தகவல் வதந்தி என உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய்குமார் விளக்கமளித்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிரான வழக்கை விசாரித்தபோது, “விஜய் வேகமாகச் செயல்பட விரும்புகிறார் என்றால், நீங்கள் ஏன் மெதுவாகச் செயல்படுகிறீர்கள்?” என்றுதான் கேட்டதாகக் குறிப்பிட்டார். இதனை முதலமைச்சர் விஜயைப் பாராட்டியதாகத் தவறாகப் புரிந்துகொண்டதாகத் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து விசாரிப்பது சரியாக இருக்காது எனக் கூறி அவர் விசாரணையிலிருந்து விலகினார்.
‘முதல்வர் விஜயை பாராட்டவில்லை’.. நீதிபதி சஞ்சய்குமார் விளக்கம்
