Skip to content

பைக் ரேஸில் சென்ற சிறுவர்கள் பலி…. கதறிய உறவினர்கள்..

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் மூன்று டூவீலர்களில்  ஐந்து முனை சந்திப்பிலிருந்து நான்கு முனை சந்திப்பு வழியாக  ஆவியூர் நோக்கி மூன்று இருசக்கர வாகனம் அதிவேகமாக  சென்றுள்ளது. ஒரு பைக்கில் விக்னேஷ்(18), செல்வகுமார் (18) ஆகிய இருவரும் மற்றொரு பைக்கில் ஆகாஷ்(18), ஜெய்(15) ஆகிய இருவரும்,  அதே போல் மற்றொரு பைக்கில் மோகன்ராஜ்(18), ஹரிஷ்(17) ஆகிய இருவரும் அதிவேகமாக சென்றுள்ளனர். பின்னர் திருக்கோவிலூர் எல்லை பகுதியை தாண்டி ஆவியூர் அருகே சென்ற போது, மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் சென்ற பைக் விபத்துக்குள்ளாகி பைக்கில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்ததாக முதலில் சொல்லப்பட்டது.

அதன் பின்னர், திருக்கோவிலூர் போலீசார் சம்பவம் குறித்து, இறந்தவர்களின் பைக்கிற்கு பின்னால் சென்ற திருக்கோவிலூரை சேர்ந்த விக்னேஷ் வயது 19 என்கின்ற இளைஞரிடம் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்து இருவது உடலையும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் இந்த விசாரணையில், மூன்று இருசக்கர வாகனங்களும் நகர் பகுதியில் இருந்து அதிவேகமாக ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் மூவரும் திருக்கோவிலூர் எல்லையைத் தாண்டி ஆவியூர் நோக்கி சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானதாக இறந்தவர்களது உறவினர்களும் மற்ற இரண்டு பைக்கில் சென்றவர்களும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் திருக்கோவிலூர் போலீசார் விசாரணையை தீவிரபடுத்திய போது அந்த வழியாக டிராக்டர் ஒன்று வந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், டிராக்டர் மீது மோதி பைக் மீது விபத்துக்குள்ளாகி இருவரும் உயிரிழந்தார்களா? அல்லது அதிவேகத்தின் காரணமாக நிலை தடுமாறி விழுந்ததில் இருவரும்  உயிரிழந்தார்கள் அல்லது மூன்று பைக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்தை நிகழ்ந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக, மூன்று பைக்கும் சென்ற சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ஆவியூரில் இருந்து திருக்கோவிலூர் நகர் பகுதியை நோக்கி டிராக்டர் வந்ததாக சொல்லப்படுவதால் அந்த டிராக்டர் குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதிவேகமாக பைக்கை   ஓட்டிச் சென்ற மோகன் ராஜ், விக்னேஷ், ஆகாஷ் ஆகிய மூன்று பேரிடமும் வாகனத்தை இயக்குவதற்கான ஓட்டுனர் உரிமம் இல்லை தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!