Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரின் 441 செய்ற “420 வேலை”.. வெளுத்து வாங்கிய VSB

அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அரசு அலுவலர்கள் குளறுபடியால் கோவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அமைத்து இதற்கான தீர்வை கூடிய விரைவில் எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் பேட்டி.

கரூர், திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பம் போட்டி கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி போட்டியை துவக்கி வைத்தார்.

முதல் நாள் போட்டிகளில் பெண்களுக்கான போட்டியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார் போட்டியில் 14 முதல் 19 வயது வரை பெண்கள் கலந்து கொண்டனர் மற்றும் பொது பிரிவு வயது வரம்பு கிடையாது பெண்களும் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் முதல் பரிசு 25 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு 20 ஆயிரம் மூன்றாம் பரிசு 15 ஆயிரம் என மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் பெண்களுக்கான பரிசுத் தொகையை வழங்க உள்ளனர்.

கரூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டனர் முதல் சுற்று நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பிக்சர்ஸ் போடப்பட்டு தொடர்ந்து போட்டிகளை நடைபெறும் என்று தெரிவித்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கூறுகையில்:
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இந்து அறநிலை துறைக்கு சார்ந்த இடங்கள் கையிடப்படவில்லை ஆனால் கரூர் மாவட்டத்தில் முக்கியமாக கரூர் சட்டமன்ற தொகுதி மட்டும் குறிவைத்து சேலத்தை சார்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை ராதாகிருஷ்ணன் அவர்களை அதிமுக நிர்வாகிகளை வைத்து செயல்பட்டு வருகிறார்கள்.

2018 – 19 அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு அரசு அலுவலர் கொளறுப்படிகளால் இந்த சட்ட பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அமைத்து இதற்கான தீர்வை கூடிய விரைவில் தீர்வு காணப்படும். 441 ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர் 420 ஆக வேலை செய்கிறார். வெண்ணமலையில் இனாம் நிலம் பிரச்சினை ஏற்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் இந்த குளறுபடி ஒன்றும் தெரியாதவர்கள் போல் அதிமுக சார்ந்தவர்கள் மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று மீண்டும் தெரிவித்து வருகின்றனர் என்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!