லெஜெண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ படம் வரும் 29-ம் தேதி ப்ரைம் OTT-ல் வெளியாகவுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி வெளியான இந்த படம் வெளியான 3 நாள்களிலேயே ₹25 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடியில் துறைமுக நாசவேலையை தடுக்கும் முன்னாள் அதிரடிப்படை அதிகாரியாக இந்த படத்தில் லெஜெண்ட் நடித்திருந்தார்.
