Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக அரசு நல்லா செயல்படுது-சிஸ்டம் மாற 3மாசம் ஆகும்-அன்புமணி

 தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய அரசின் செயல்பாடுகள் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மிக முக்கியமான, ஆச்சரியமளிக்கும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

புதிய அரசு பொறுப்பேற்ற இந்த ஒரு மாத காலத்தில் தமிழகத்தில் “பெரிய அளவில் ஊழல் குறைந்திருக்கிறது” எனப் பாராட்டியுள்ள அன்புமணி, அதே நேரத்தில் கடந்த திமுக ஆட்சியில் மின்சாரத் துறையில் அரங்கேறிய பல ஆயிரம் கோடி ரூபாய் “டிரான்ஸ்பார்மர் கார்டெல்” ஊழல்களைப் புள்ளிவிவரங்களுடன் கூறியுள்ளார்.

புதிய அரசின் ஒரு மாத காலச் செயல்பாடு குறித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது “புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில் மிக நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிறைய நல்ல மாற்றங்கள் வந்திருக்கிறது. குறிப்பாக, பல அரசுத் துறைகளில் லஞ்ச ஊழல் பெரிய அளவில் குறைந்திருக்கிறது.

“இந்த ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாற்றுவதற்கு இன்னும் 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகும். நாம் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும். ஏன்னா, ஆட்சியில் தலைவர்கள் மாறியிருக்கிறார்கள், ஆனால் இன்னும் சில அதிகாரிகளின் பழைய மனநிலை மாறவில்லை. அவர்கள் மாறுவதற்குக் கொஞ்சம் காலம் எடுக்கும்.” என தெரிவித்தார்.

புதிய அரசின் ஒரு மாத காலச் செயல்பாடு குறித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது “புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில் மிக நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிறைய நல்ல மாற்றங்கள் வந்திருக்கிறது. குறிப்பாக, பல அரசுத் துறைகளில் லஞ்ச ஊழல் பெரிய அளவில் குறைந்திருக்கிறது.

“இந்த ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாற்றுவதற்கு இன்னும் 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகும். நாம் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும். ஏன்னா, ஆட்சியில் தலைவர்கள் மாறியிருக்கிறார்கள், ஆனால் இன்னும் சில அதிகாரிகளின் பழைய மனநிலை மாறவில்லை. அவர்கள் மாறுவதற்குக் கொஞ்சம் காலம் எடுக்கும்.” என தெரிவித்தார்

தமிழகத்தில் நிலவி வரும் மின்சாரப் பற்றாக்குறை மற்றும் துறையின் நஷ்டம் குறித்து அன்புமணி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்:

“கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் நிலுவையில் உள்ள கிட்டத்தட்ட 14,000 மெகாவாட் (MW) மதிப்பிலான புதிய அரசு மின் திட்டங்களை முந்தைய அரசு செயல்படுத்தாமல் முடக்கி வைத்திருந்தது. அதில் வெறும் 800 மெகாவாட் திட்டத்தை மட்டும்தான் கடைசியில் அரைகுறையாகத் தொடங்கினர்.”

“அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி ஆலைகளில் ஒரு யூனிட் மின்சாரத்தை வெறும் ரூ.3 முதல் ரூ.3.50 விலைக்குள் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், சுயலாப கமிஷனுக்காக அரசு ஆலைகளை முடக்கிவிட்டு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9 முதல் ரூ.15 வரை மிகக் கொடூரமான விலைக்குத் தமிழக அரசு வாங்கியுள்ளது. இதனால்தான் மின்சாரத் துறைக்கு இவ்வளவு நஷ்டம்.”

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4 முறை மின் கட்டணத்தை உயர்த்தி, ஒட்டுமொத்தமாக 56% வரை கட்டணத்தை ஏற்றியுள்ளனர். இதன் மூலம் மின்சாரத் துறைக்கு ரூ .1.5 லட்சம் கோடி கூடுதலாக வருமானம் வந்தும், அந்தத் துறை இன்னும் நஷ்டத்தில் ஓடுகிறது என்றால் அதற்கு அப்பட்டமான ஊழல் தான் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் நடந்த ஊழலைப் பாருங்கள். டெண்டர் கோரப்பட்டபோது, 32 வெவ்வேறு தனியார் நிறுவனங்கள் ஒன்று கூடி, பைசா மாறாமல் ஒரே தொகையைக் குறிப்பிட்டு கார்டெல் அமைத்து கொள்ளையடித்துள்ளனர். இது எவ்வளவு பெரிய மோசடி! இதையெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறையோ அல்லது சிபிஐ அமைப்போ தான் முழுமையாக விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். இதை நாற்காலிக்கு வராமலேயே நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம்” எனவும் அன்புமணி தெரிவித்தார்.

error: Content is protected !!