Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெத்த மகனையே துடிதுடிக்க தீர்த்துக்கட்டிய தாய்! அதிரவைக்கும் காரணம்

வாழப்பாடி அருகே  துக்கியாம் பாளையம் கிழக்கு காட்டு பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் மகன் மணிகண்டன் ( 30). இவர் கட்டிட கொத்து வேலையில் மேஸ்திரியாக வேலை பார்த்து  கொண்டு இருந்தவர். இவருக்கு கொட்டவாடி பகுதியைச் சேர்ந்த வினோதினி (28) என்ற பெண்ணை 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கிருத்திகா (9) என்ற மனைவி உள்ளனர், இவர்களது மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக மனைவியுடன் கொட்டவாடியில் மனைவியின் அப்பா வீட்டில் வசித்து  வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி முதல் எந்த ஒரு போன் காலும் வராததாலும், 22 ஆம் தேதி போன் சுவிட்ச் ஆப் செய்துள்ளதாலும் மனைவிக்கு சந்தேகம் எழுந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் மனைவி பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த 1-4-2026 ஆம் தேதி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மணிகண்டன் மாயமாகியதாக வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அவரது  தாய்  ஜோதி, தந்தை சின்னப்பன் ஆகியோரை அழைத்து விசாரணை செய்ததில் கடந்த 23ஆம் தேதி  தாய்க்கும், மகனுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும்,மேலும் தாயிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு ஈடுபட்டதாகவும்,பணம் இல்லை என்று மகனை தள்ளி விட்டதாகவும், கீழே விழுந்ததில் தலையில் பின்புறம் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்ததாகவும், பின்பு தாயும் தந்தையும் அருகில் உள்ள வீரமுத்து என்பவர் உதவியுடன் தனது பாக்கு தோட்டத்தில் புதைத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மருத்துவ குழுவினர் சேலம் உடற்கூறு ஆய்வு நிபுணர் கோகுல்ராஜ் சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். இதில் இதில் வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன் வாழப்பாடி வட்டாட்சியர் நாகலட்சுமி உள்ளிட்ட வருவாய் துறை மற்றும் போலீசார் சுகாதாரத் துறையினர் உடன் இருந்தனர் . இந்த வழக்கில் தாய் ஜோதியை வாழப்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!