Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜோ’ படக் கூட்டணியின் அடுத்த படைப்பு! பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே மாணவன்

ஜோ' படக் கூட்டணியின் அடுத்த படைப்பு! பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே மாணவன்

ஜோ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருளானந்து தயாரித்து, யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘ஹைக்கூ’. இதில் ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படப் புகழ் ஏகன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ படப் புகழ் பெமினா ஜார்ஜ் மற்றும் ‘கோர்ட்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். இந்த படம் அக்டோபர் 23ம் தேதி வெளியாகவுள்ளது.

சந்தர்ப்ப சூழ்நிலையால் பெண்கள் கல்லூரியில் படிக்க வேண்டிய சூழல் ஒரு மாணவனுக்கு ஏற்படுகிறது. அங்கு அவனுக்கு நடக்கும் காதல், மோதல் உள்ளிட்டவைகளை மையமாக கொண்டு இப்படம் தயாராகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்க செய்துள்ளது.

இந்த படம் குறித்து நடிகர் ஏகன் கூறுகையில், “இது ஒரு நூதன காதல் கதை. இப்படியும் இருக்கலாமே… என்று அனைவரும் ஏற்கக்கூ டிய வகையிலேயே கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கிறது. எல்லா தரப்பினருக்கும் பிடிக்கும்”, என்றார். மேலும், கதாநாயகி பெமினா ஜார்ஜ் கூறும்போது, “படத்தில் 2 கதாநாயகிகள் இருந்தாலும் எந்த பிரச்சினையும் எங்களுக்குள் இல்லை. நல்ல கதை என்றால் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் இணைந்து நடிக்கலாம்”, என்றார்.

தயாரிப்பாளர் அருளானந்து கூறும்போது, “படப்பிடிப்பு தொடங்கும் முன்பாகவே ஓ.டி.டி. நிறுவனம் எங்கள் படத்தை வாங்கியுள்ளது. இது கதை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது”, என்றார்.

error: Content is protected !!