மின் மீட்டர் கணக்கீட்டில் ஏற்படும் குளறுபடிகளால், பயன்படுத்தாத மின்சாரத்துக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாகவும், கூடுதல் கட்டணச் சுமையால் நுகர்வோர் அவதிப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
பல வீடுகளில் மின் கட்டணம் இரு மடங்காகவும், சில வீடுகளில் பல மடங்காகவும் அதிகரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பிட்ட யூனிட்டுகளை எட்டுவதற்கு முன்பே அவற்றை எட்டிவிட்டதாகக் கணக்கிட்டு கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மின் பயன்பாட்டைக் கணக்கிடுவதில் தாமதம் ஏற்படுவதால், கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் குறைவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். மின் கணக்கீட்டுக் குளறுபடிகளைச் சரிசெய்து, முறையான கணக்கீட்டின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிக்க மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நுகர்வோர்களின் கோரிக்கையாக உள்ளது.
