Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொன்னி அரிசி பேச்சு சர்ச்சை – அமைச்சரின் புது விளக்கம்!

பொன்னி அரிசி பேச்சு சர்ச்சை – அமைச்சரின் புது விளக்கம்!

பொன்னி அரிசி மக்கள் சாப்பிடுவது சோசியல் ஸ்டேட்டஸ் என நேற்றைய தினம் அமைச்சர் பேசியது சர்ச்சையான நிலையில், அமைச்சர் புது விளக்கம்

எனக்கு என்ன தேவை என்பதை நான் சாப்பிடுகிறேன் மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டேன்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணிகள் முதலமைச்சர் ஆய்வில் உள்ளது

-அமைச்சர் வெங்கட்ரமணன் பேட்டி

அமைச்சர் பேசும்பொழுது ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் இருக்கிறது என பொதுமக்கள் அமைச்சர் நோக்கி கேள்வி

சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் சென்னை மாநகராட்சியில் மூலதன நிதியின் கீழ் ரூபாய் 8.49 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் பூங்காவை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அமைச்சர் வெங்கட்ராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி

கடந்த ஆட்சியில் 12 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு பொருட்களின் தேவைகளை குறைத்து 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகேஸ்வர ராவ் பூங்கா கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும்

இந்த நவராத்திரி விழாவில் மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய ஒரு பகுதியில் பிரபலமான நாகேஸ்வரராவ் பூங்கா புதுப்பிக்கப்பட்டிருக்கிறது

((பொன்னி அரிசி சாப்பிடுவது மக்கள் சோசியல் ஸ்டேட்டஸாக பார்க்கிறார்கள் என அமைச்சர் பேசியது குறித்தான கேள்விக்கு))

அது ஆங்கிலத்தில் சொல்லும் பொழுது தவறாக தெரிகிறது. மக்களின் விருப்பம் என்று சொன்னேன்.

நான் ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன்.

சிறு வயதில் இருந்து – ரேஷன் அரசி தான் சாப்பிடுகிறேன்

உங்களது குடும்ப ரேஷன் அட்டையின் நிறம் என்ன? செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு

தனியாக வாருங்கள் சொல்கிறேன் !

சோசியல் ஸ்டேட்டஸ் என்பது மக்கள் சந்தோஷத்திற்காக சாப்பிடுவது.

வாரது இறுதி நாட்களில் மக்கள் வெளியில் சென்று சாப்பிடுகிறார்கள் ஞாயிறு சனிக்கிழமைகள் வந்தால் வெளியில் சென்று சாப்பிடுவோம்

அது ஒரு சந்தோஷம், நம்ம குடும்பத்திற்காக செலவிடும் நேரம் அது ஒரு சந்தோஷம் .

வெங்காய விலையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் ? என்ற‌ கேள்விக்கு

((அமைச்சர் பேசும்பொழுது ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் இருக்கிறது என்று பொதுமக்களில் இருந்து ஒரு பெண் குரல் எழுப்பினார்.))

கிடங்கில் இருந்து கொள்முதல் செய்து அமுதம் அங்காடி மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் வெளி மார்க்கெட்டை விட குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். –

மலிவு விலையில் 1 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை குறைந்தபட்சம் 5 கிலோ அரிசியை எல்லா ரேஷன் கடைகளிலும் 30 ரூபாய்க்கு வழங்குகிறோம் .

தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக ரேஷன் அரிசிதான் மக்கள் சாப்பிட வேண்டும் என்று தவெக அரசு நினைக்கிறதா ?

ரேஷன் கடையில் பொன்னி அரிசி போல் அரிசியை போடுவோம் என்று சொன்னார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.!?

அரசை பொருத்தவரை சன்ன ரக அரிசி என்பதை தான் பொன்னி அரிசி என்று சொல்கிறோம். ஒன்று மோட்டார் அரிசி குண்டாக இருக்கும் இன்னொரு அரிசி சன்ன ரக அரசில் அதைத்தான் பொன்னி ரக அரிசி என சொல்லுகிறோம் இது மாறுப்படும் –

ரேஷனில் பெறப்படும் அரிசி இட்லி அரிசியாக மட்டுமே மக்கள் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள் உங்கள் அரசு என்ன செய்ய போகிறது ?

நீங்கள் ரேஷன் கடைக்குப் போங்கள் மக்கள் என்ன வாங்குகிறார்கள் என்பதை மக்களோடு மக்களாக இருந்து பாருங்கள் .

நீங்களே ரேஷன் அரிசி தான் சாப்பிட்டேன் என்று சொல்கிறீர்கள் அப்போ கடந்த காலத்தில் அரிசி தரமாக தானே கொடுக்கப்பட்டது ?

எனக்கு தேவை என்பதை நான் ரேஷன் கடையில் அரிசி எப்படி வருகிறது அதை சாப்பிடுகிறேன். மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த மாட்டேன்.

ஒவ்வொரு மக்களின் வாழ்வாதார மிக முக்கியம், அதுக்காக தான் நாங்கள் 7 நாட்களும் ஓடுகிறோம்.

மக்கள் வெளியே போய் ஹோட்டல்களில் சாப்பிடுவதை தான் social status என்று சொன்னேன்.

பட்டினம்பாக்கம் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் !

மயிலாப்பூர் தொகுதி பட்டினம்பாக்கம் மக்களிடம் அமைச்சர் வெங்கட்ரமணன் விஜயை பார்த்து தான் வாக்களித்தீர்கள் எனக்காக வாக்களிக்கவில்லை என்று சொன்னது குறித்தான கேள்விக்கு,

என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மீனவ மக்களிடம் தான் தொடங்கினேன்.

இப்போது சொன்னது போல, சீனிவாசபுரம் முல்லை நகரில் ஒரு கல்யாண மண்டபம் இருக்கிறது அங்கு என்னுடைய தேர்தல் நேரத்தில் அதை எடுத்து நாங்கள் தேர்தல் வேலை செய்தோம்.

30 நாள், என்ன கட்டணம் செலுத்தி அதை நான் பயன்படுத்த முற்பட்டேன் ஆனால் அதை பயன்படுத்த என்னை விடவில்லை.

பட்டினப்பாக்கம் பகுதியில் – புதிய தலைமைச் செயலகம்? அமைக்கும் பணிகள் நிலை குறித்து கேள்விக்கு.

புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணிகள் முதலமைச்சரிடம் ஆய்வில் இருக்கிறது என தெரிவித்தார்.

error: Content is protected !!