Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஞ்சாப் நடிகையை கரம் பிடித்த ‘ராப்’ பாடகர்:

பிரபல ராப் பாடகர் பாட்ஷா மற்றும் பஞ்சாப் நடிகை ஈஷா ரிககி ஆகியோரின் ரகசிய திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகில் பிரபல ராப் பாடகர் பாட்ஷா, கடந்த 2020ம் ஆண்டில் தனது முதல் மனைவி ஜாஸ்மின் மசிஹ் என்பவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ஈஷா ரிககி (32) என்பவரை பாட்ஷா காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அவ்வப்போது ஜோடியாக வலம் வந்த நிலையில், இவர்களது காதல் குறித்த செய்திகள் ரகசியமாகவே வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று பாட்ஷா மற்றும் ஈஷா ரிககி ஆகிய இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது.

ஈஷாவின் தாயார் பூனம் ரிககி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வது மற்றும் அக்னியை சுற்றி வரும் சடங்குகளைச் செய்யும் காட்சிகளைப் பகிர்ந்து, ‘கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என்று பதிவிட்டு திருமணத்தை உறுதி செய்துள்ளார். தற்போது பாட்ஷாவின் திருமண புகைப்படங்கள் உறுதியாகி உள்ள நிலையில், இது குறித்து அவர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

error: Content is protected !!