சென்னை: சபாநாயகரின் இன்றைய செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். தலைநகரிலேயே சட்டம் ஒழுங்கு அசாதாரண சூழலில் உள்ளது. முதலமைச்சர் உரைக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதாலேயே திமுக வெளிநடப்பு; சபாநாயகர் இவ்வளவு கடுமையை காட்டியிருக்கக் கூடாது என்றும் கூறினார்.
