மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் காரைக்குடியின் முன்னேற்றத்துக்கு என்ன செய்தார் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். காரைக்குடியில் பிரசாரம் செய்த அவர், நான் போட்டியிடுவதால் உலகில் உள்ள அனைவருக்கும் இந்த ஊரை பற்றி தெரிகிறது என்றார். தனக்கு வாக்களிக்க துபாய், அமெரிக்கா, லண்டனில் இருந்து பலரும் வந்துள்ளதாகவும், மாற்றத்தை இந்த மண்ணில் இருந்து தொடங்க நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
