Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம் முழுவதும் ‘X’ தளம் முடங்கியது

உலகம் முழுவதும் ‘X’ சமூக வலைதள தளம், இன்று காலை திடீரென முடங்கியது.

சேவை தடங்கல்களை கண்காணிக்கும் ‘டௌன்டெக்டர்’ தளத்தில், சுமார் 5,400-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, நியூயார்க் மற்றும் சியாட்டில் போன்ற நகரங்களில் வசிக்கும் பயனர்கள் இந்த பாதிப்பை அதிக அளவில் எதிர்கொண்டனர்.

சில பயனர்களுக்குச் சில நிமிடங்களிலேயே சேவை சீரான நிலையில், பலருக்கு செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. இந்த முடக்கத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து எலான் மஸ்க் தரப்பிலிருந்தோ அல்லது ‘X’ நிர்வாகத்திலிருந்தோ இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பயனர்கள் சிலர் தங்கள் இணைய இணைப்பை சரிபார்ப்பது, செயலியை புதுப்பிப்பது அல்லது கேச் தரவுகளை அழிப்பது போன்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும், இது நிறுவனத்தின் சர்வர் பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்பதால், தனிப்பட்ட பயனர்களின் தீர்வுகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. 

சில நாட்களுக்கு முன்னரும் இதே போன்ற தொழில்நுட்ப கோளாறுகளை ‘X’ தளம் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!