Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் டீக்கடை, ஜெராக்ஸ்-ஓட்டல் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

திருச்சியில் டீக்கடை, ஜெராக்ஸ்-ஓட்டல் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

திருச்சி செசன்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன் நகர் இரண்டாவது மெயின் வீதியில் டீ கடை மற்றும் ஜெராக்ஸ், ஹோட்டல் உள்ளது. இதே போன்று பொன் நகர் நான்காவது வீதியில் உள்ள டிராவல்ஸ் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள டீக்கடை மற்றும் சூப்பு கடை உள்ளது இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து இருக்கிறார்கள்.சில கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாவில் இருந்த சிறிய தொகை பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.இன்று காலை கடையை திறக்க வந்த நபர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்இது குறித்து தகலறிந்து செசன்ஸ் கோர்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் இவ்வாறு தொடர் திருட்டு முயற்சி நடைபெற்று இருப்பதும் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது உடனடியாக காவல்துறை இதன் பேரில் நடவடிக்கை எடுத்து குற்றத்திற்கு காரணமானவர்கள் கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுக் கோள் விடுத்துள்ளனர்.

error: Content is protected !!