திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலாதேவி (40) என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.
வாத்தலை பகுதியில் நடைபெற்ற வீடுபுகுந்து கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நீலாதேவி (40) என்ற பெண்ணுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நீலாதேவி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.4,000 அபராதமும் விதித்து திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
