Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குறுக்குவழிகள் இல்ல.. எனக்காக இதை செய்கிறேன்.. சைந்தவியின் பதிவு!

குறுக்குவழிகள் இல்ல.. எனக்காக இதை செய்கிறேன்.. சைந்தவியின் பதிவு!

பாடகி சைந்தவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய பதிவு தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, உடற்பயிற்சி மற்றும் உடல் மாற்றத்திற்காக அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பல பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. “சில நாட்களில் நமக்கு கூடுதலான உத்வேகம் தேவைப்படும். இன்று அப்படிப்பட்ட ஒரு நாள். கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், கட்டுப்பாட்டுடனும் இருக்கிறேன். இப்போது தான் என்னுடைய முயற்சிக்கான பலன் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியுள்ளது.

தினமும் சிறிய அளவிலாவது மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஒரே நாளில் உடல் மாறிவிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இது வெறும் தொடக்கம் மட்டுமே. இன்னும் நீண்ட பயணம் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தப் பயணத்தை தான் தனக்காகவே தொடங்கியுள்ளதாகவும், புதிதாக உருவாகப்போகும் தனது மாற்றத்திற்காகவே இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது உடற்பயிற்சி பயணத்தின் ஒரு பகுதியாக உடற்பயிற்சி செய்யும்

வீடியோவையும் சைந்தவி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் ஜி.வி. பிரகாஷ். இவரது இசையில் வெளியான பல பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல், தனது இனிமையான குரலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் பாடகி சைந்தவி. இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்தே ஒருவரையொருவர் அறிந்தவர்கள். பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

பல ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்தத் தம்பதியினர், கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிவதாக அறிவித்தபோது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, 2025 செப்டம்பர் 30-ம் தேதி இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இருப்பினும், பிரிவுக்குப் பிறகும் ஒருவரையொருவர் மதித்து நடந்து வருவதுடன், தங்களது குழந்தையின் நலனிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும், இசைத்துறையில் இருவரும் தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link