Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறை செல்லவிருந்த ஈபிஎஸ்சை இவர்கள்தான் காப்பாற்றினர்”- ஓபிஎஸ்

தேனி மாவட்டம் போடியில் போடி சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் திமுக எம்எல்ஏ லட்சுமணன் போடி நகர செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டணி கட்சி தோழர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும்  தற்போதைய மாநில செயலாளருமான முத்தரசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . 

அப்போது பேசிய முத்தரசன், யாரோ கட்டிய வீட்டில் சிலந்தி புகுந்து வலை விரித்து அதில் ஈயை சிக்க வைத்து அதை கொள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி கொன்றுவிடும். அதுபோன்று தான் பிஜேபி சிலந்தி வலையில் எடப்பாடி பழனிச்சாமி எனும் ஈ சிக்கி உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் எதிர் திணிக்க கூடிய வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்து மாபெரும் வெற்றி அடைய வேண்டும். அந்த பொறுப்பு தங்கத்தமிழ்செல்வனுக்கு உள்ளது.தமிழகத்திலேயே அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் என்ற நிலையை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், “தேர்தல் பிரச்சாரடததில் ஈபிஎஸ் அரசியல் நாகரீகம் இல்லை. படுதோல்வி உறுதி ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை உருவாக்கியுள்ளது. அதனால் ஈபிஎஸ் மூளை அவுட் ஆகிவிட்டது. கலைஞரை பற்றி பேச ஈபிஎஸ்க்கு தகுதியில்லை.அண்ணாவின் தம்பியாக, பெரியாரின் சிஷ்யனாக எவ்வளவோ சோதனைகளை தாண்டி தமிழக மக்களுக்கு சமூக நீதியை பெற்று கொடு்த்தவர் கலைஞர்.  சிறை செல்லவிருந்த ஈபிஎஸ்சை செல்வகணபதி, முத்துச்சாமி ஆகியோர்தான் காப்பாற்றினர். உலகில் நன்றி கெட்ட நம்பிக்கை துரோகி அரசியல்வாதி எடப்பாட் பழனிசாமி மட்டுமே. ஈபிஎஸ் பொதுச்செயலாளராக வந்தது முதல் அதிமுக தோல்விகளைதான் சந்தித்துவருகிறது” என்றார்.

error: Content is protected !!