Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சினிமா மாயையில் வாக்களித்துள்ளர்- திருச்சி தெற்கு மா.செ.ஆர்.மனோகரன்

சினிமா மாயையில் வாக்களித்துள்ளர்- திருச்சி தெற்கு மா.செ.ஆர்.மனோகரன்

ஸ்ரீரங்கம் பகுதி, திருவானைக்கோவில் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்திருவனைக் கோவிலில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருவானைக்கோவில் பகுதி கழக செயலாளர் டைமன் திருப்பதி, திருவரங்கம் பகுதி கழக செயலாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் வரவேற்றனர். மாநில சிறுபான்மை நலப்பிரிவு துணை செயலாளர் புல்லட் ஜான்,மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஜெயம் ஸ்ரீதர்,ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.பி.முத்துக்கருப்பன், ராஜகோபால், ஜெயகுமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன்,மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சோனா விவேக், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் சாத்தனூர் வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.மனோகரன் பேசியதாவது:-

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் பகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் திருவனைகாவலி உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அரசு கொறடா மனோகரன் கலந்து கொண்டு பேசும் பொழுது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வில்லை.அதனால் தான் வெற்றி பெற முடியவில்லை. ஜென்சி கூட்டம் என்று அழைக்கப்படும் இளைஞர்களிடம் அதிமுக இயக்கத்தை பற்றியும், நம்முடைய ஆட்சியில் செய்த திட்டங்கள், சாதனைகளை பற்றி எடுத்து கூறவில்லை. அதனால் தான் இந்த நிலை ஏற்பட்டது.
இந்த தேர்தலில் சினிமா மாயையில் மயங்கி வாக்குகளை அவர்களுக்கு அளித்துள்ளனர். அதிமுக ஆலமரம் போன்றது. என்றைக்கும் அது கீழே விழாது. சில தற்குறி நம்மை பற்றி
விமர்சனம் செய்து பேசலாம்.வருங்காலத்தில் அவர்களுக்கு
தக்க பாடம் புகட்ட வேண்டும் அதிமுகவை சீண்ட நினைத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.இன்றைக்கு ஆட்சி நடக்க வில்லை. சூட்டிங் நடக்கிறது. கரூர் சம்பவத்தில்
விஜயை
காப்பற்றியது எடப்பாடியார்.
அன்றைக்கு அவர் ஆதரவாக பேசவில்லை யென்றால் நிலைமை மாறி இருக்கும். தாய்மாமன் சீர் என்று இன்றைக்கு பெருமையாக சொல்கிறார்கள்.ஆனால் அன்றைக்கு ஜெயலலிதா தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை என்று பலதொலைநோக்கு திட்டங்களை வழங்கினார்.
அதேபோல எடப்பாடியார் 7.5 சதவீதம் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு வழங்கி அவர்கள் டாக்டர்களாக உருவாக காரணமாக இருந்தார். இன்றைக்கு மைனாட்டி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை பிடிக்க அவர்கள் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார் கள்,திமுக அதிமுகவை பார்த்து களவாணிகள் என்று விஜய் கூறுகிறார். ஆனால் உண்மையான களவானி யார் என்பது தெரியுமா ?நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளை அமைச்சர் பதவி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அங்கிருந்து களவாணி செய்து இவர் கூட்டணியில் சேர்த்துக் கொண்டார். அதுபோல அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தனது கட்சியில் சேர்த்துக் கொண்டார். இது களவானி இல்லையா? இதிலிருந்து களவானி யார் என்பது தெரியும்
6 மாதம் 1 வருடத்தில் இந்த ஆட்சி முடிந்து விடும். இனி குதிரை பேரம் இருக்காது. கட்சியில் எம் எல்.ஏ க்கள் சேர மாட்டார்கள். இந்த இயக்க வெற்றி பெறும்.இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அதிக அளவு இளைஞர்களை கட்சியில் இணைத்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள்
வி என் ஆர் செல்வம்,கலைமணி,இபி ஏகாம்பரம்,பாலு ஐயர்,சுடர்மதி, குப்புசாமி சம்பத்குமார்,ஜெயந்தி தமிழரசன்,நாகராஜ் மிட்டாய் முருகன்,எம்பி பிரகாஷ்,தெப்பக்குளம் செந்தில், கேசவன், சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!