Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திறன்படிப்பு உதவி திட்ட தேர்வு… பாபநாசம் மாணவி வெற்றி… பாராட்டு விழா..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவி மோனிகா 2023- 24ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து மாணவி மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த வகுப்பு ஆசிரியருக்கு பாபநாசம் கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் ராஜேந்திரன், துணைச்செயலாளர் கார்த்தி, பொருளாளர் புகழேந்தி ஆகியோர் மாணவி மோனிகாவிற்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு, 9 முதல் 12-ம் வகுப்பு வரை அவர்களது வங்கி கணக்கில் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு சார்பில் ஆண்டுக்கு தலா ரூ. 12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 48 ஆயிரம் செலுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!