திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் அருள் தரும் ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு மத்தியார்ஜீனேஸ்வர்(கூத்தப்பெருமான்) பவள சபை கோவிலில் சூரசம்காரம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது

அருள் தரும் ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு மத்தியார்ஜீனேஸ்வர் கோவிலில் சூரசம்காரம் திருவிழா
கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம் அதில் கந்த சஷ்டி திருவிழா மிக சிறப்பு வாய்ந்த ஒன்று இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது தினமும் பல்வேறு அபிஷேகமும் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் திருவிழா இன்று மாலை 6.00 மணிக்கு கூத்தைப்பாரில் உள்ள சிவன் ஆலயத்தின் முன்பாக நடைபெற்றது
இதை ஒட்டி இன்று
அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு உற்சவமூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கோவிலுக்கு முன்பாக மாலை 6.00 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
நடைபெற்றது இதில் கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது
இதன் பிறகு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சூரசம்காரத்தை கண்டு களித்தனர் .
நாளை (19-11-2023 )
9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஞாயிற்றுக்கிழமை தேவசேனா சமேத முருகப் பெருமான் திருக்கல்யாணம் நடைபெறுகிறது..மாலை 6:00 மணிக்கு நாதஸ்வர மேளதாளம் முழங்க மற்றும் வான வேடிக்கையுடன் முருகப்பெருமான் தேவசேனாவுடன் திருவீதி உலா விமர்சையாக நடைபெற உள்ளது.