மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (CRPF)

மலையைத் தங்களது பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு மதுரைக்கு வருகை தந்துள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை மேற்கொள்ள வந்த

இஸ்லாமியர்கள், தீவிர பாதுகாப்புச் சோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கோயில் மற்றும் தர்கா ஆகிய இரு வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
