Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் – பழ.நெடுமாறன் வலியுறுத்தல்!

உலக நாடுகள் எல்லாம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது போல் இந்தியாவும் நீக்க வேண்டும் மாவீரர் தின நிகழ்வில் பழ.நெடுமாறன் வலியுறுத்தல்.

தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கண்டு
முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்போது பேசிய நெடுமாறன் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என இந்த மன்றத்தில் நான் செய்தியாளர்களிடம் முன்பு கூறினேன், அதை சிலர் எதிர்த்து பேசினார்கள், இந்திய அரசாங்கம் அதை ஏற்றுக் கொண்டு எனக்கு ஒரு கடிதம் அனுப்பியது, அதில் நீங்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற சொன்னதன் மூலம் இந்திய- இலங்கை உறவு சீர்கெட்டுவிட்டது. எனவே உங்கள் பாஸ்போர்ட்டை நாங்கள் ரத்து செய்கிறோம் என கடிதம் அனுப்பினார்கள். நான் பாஸ்போர்ட் இல்லாமலேயே இலங்கைக்கு நான்கு முறை சென்றவன், பாஸ்போஸ்ட் இல்லாமல் எங்கிருந்து எங்கும் போக முடியும்.
தற்போது சர்வதேச சூழ்நிலை கனிந்து வருகிறது, 2009 -ம் ஆண்டில் இருந்த சூழ்நிலை வேறு, அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை பயங்கரவாதிகள் தாக்கிய போது, உலகம் முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிராக திரண்டது. அதை ராஜபக்சே தனது சுயநலனுக்கு பயன்படுத்திக் கொண்டு, இந்தியா உள்பட 20 நாடுகளின் ஆதரவைப் பெற்று விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டதாக கூறினார்.
ராஜீவ் கொலை வழக்கின் முதல் குற்றவாளியாக பிரபாகரன் பெயர் இருந்தது, இன்னமும் இருக்கிறது, தேடப்படும் குற்றவாளிகளாக பிரபாகரனும், விடுதலைப் புலிகளின் பொட்டம்மன், பெண்கள் பிரிவின் தலைவி அகிலா ஆகியோரது பெயர் இன்னமும் நீதிமன்றத்தில் இருக்கிறது. இறந்துவிட்டார் என்று சொன்னால் இறப்பு சான்றிதலை கொண்டு வந்து நீதிமன்றத்தில் கொடுத்தால் வழக்கை முடித்து விடுவார்கள். ஏன் இன்னமும் இந்திய அரசும், இலங்கை அரசும் பிரபாகரன் இறந்ததற்கான சான்றிதலை நீதிமன்றத்தில் கொடுக்கவில்லை, கொடுக்கிற துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா என்றார்.

உங்களால் சில உண்மைகளை சில நாள் மறைக்கலாம், பல நாள் மறைக்கலாம். ஆனால், அதை எல்லா நாளும் மறைத்து விட முடியாது. பிரபாகரன் தலைமையில் தமிழீழம் மலரப் போவதை அனைவரும் பார்க்கப் போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை, ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலி இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கிவிட்டது. ஆனால் இந்தியா, அமெரிக்கா, இலங்கை இந்த மூன்று நாடுகளில் மட்டும் தான் தடை உள்ளது. இந்த தடையை இந்தியாவும் நீக்க வேண்டும்.
சீனா இன்றைக்கு இலங்கையில் ஆழமாக கால் ஊன்றி நிற்கிறது. ஈழத் தமிழர்களுக்கு அதனால் ஆபத்தா என்றால் இல்லை, அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு வழி தெரியும். இந்தியாவுக்கு தான் ஆபத்து. சீனாவின் உளவு கப்பல் இலங்கைக்கு வருகிறது. அந்தக் கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், அங்கிருந்தே இந்தியா பூராவிலும் இந்திய படைத்தளங்களை எல்லாம் வேவு பார்க்க முடியும்.
சீனாவின் அபாயத்தை போக்க வேண்டுமானால் பிரபாகரன் இந்தியாவுக்கு உதவி செய்தால் ஒழிய, இலங்கையில் சீன அபாயத்தை போக்கவே முடியாது. அதை டெல்லியில் இருப்பவர்கள் உணர வேண்டும், எண்ணிப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் விளைவுகள் வேறு விதமாக போய்விடும் என்பதை நான் எச்சரிக்க விரும்புகிறேன் என்றார்.

error: Content is protected !!
Secret Link