சிவகங்கை மாவட்டம், கிளாதாரி ஊராட்சிக்கு உட்பட்ட கக்கினியாம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு மற்றும் பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கூகுள் மேப்பில் கூட தங்கள் கிராமத்தின் பெயர் இல்லை என வேதனை தெரிவிக்கும் மக்கள், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூகுள் மேப்பில் இல்லாத கிராமம்: வசதியின்றி மக்கள் அவதி!
