Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரவக்குறிச்சி அருகே சபரிமலைக்கு சென்று திரும்பிய 3 பேர் உயிரிழப்பு- 4 பேர் காயம்.

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி அருகே சபரிமலைக்கு சென்று திரும்பிய 3 பேர் உயிரிழப்பு,4 பேர் காயம்.

நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 8 நபர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு மாருதி ஈக்கோ காரில் இன்று அதிகாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தனியார் ஹோட்டல் அருகே அதிகாலை 1.45 மணியளவில் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத லாரி மீது வேகமாக மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மணிகண்டன், கோவிந்தன் மற்றும் பழனிவேல் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் லாரியின் டயர் கழன்று விழுந்த நிலையில், லாரி நிற்காமல் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும், காரில் பயணித்த தனுஷ், ஹரிஷ், சிதம்பரம் மற்றும் 8 வயது சிறுமி தன்ஷிகா ஆகிய 4 பேர் காயமடைந்தனர்

விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரவக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் ஹரிஷ் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!
Secret Link