Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப்பதிவு!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப்பதிவு!

திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற முயன்று, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நேற்று (நவம்பர் 24) அந்த மலைத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. மாறாக, வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக தீப விவகாரத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மதுரை மாவட்டத்தில் BNSS 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், மலைப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. சிசிடிவி கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை உச்சநீதிமன்ற உத்தரவின்படி மலைத்தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருப்பரங்கின்றம் மலை மீது ஏற முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அதன்படி கைது செய்யப்பட்ட் 300 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனித்தனியாக நான்கு வழக்குகளாக ஆறு பிரிவுகளின் கீழ் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், திருப்பரங்குன்றம் கோவில் வளாகம் மற்றும் மலை அடிவாரப் பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் கூடுதல் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!
Secret Link