சென்னையில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொசுப் புழுக்களை அழிக்க வீடு வீடாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மாநகராட்சி பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்கும் வகையில் வீடுகள் தோறும் களப்பணியாளர்கள் மூலம் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள தேங்காய் ஓடு, கண்ணாடிப் பொருட்கள், டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றுதல், வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் கொசுப்புழு உருவாகியுள்ளதா எனக் கண்டறிந்து கொசுக்கொல்லி மருந்து தெளித்தல், வீடுகள்தோறும் காய்ச்சல் பாதிப்பு விவரங்களைக் கேட்டறிந்து, அவ்விவரங்களைப் பதிவு செய்தல், அவ்விடத்தில் தீவிரத் தூய்மைப் பணி மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் கொசுக்கொல்லி மருந்து தெளித்தல், தெருக்கள் மற்றும் வீடுகளில் கொசு ஒழிப்பு புகைமருந்து அடித்தல், உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்கள் பயன்படுத்தப்படாத பொருட்களில் மழைநீர் தேங்கி அவற்றில் உற்பத்தியாவதற்கு வாய்ப்புள்ளது. ஏடிஸ் வகைக் கொசுக்கள் பகல் நேரங்களில் மனிதர்களைக் கடிக்கும் தன்மை கொண்டவை என்பதால், டெங்கு பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள பள்ளிகள், வீடுகள், தெருக்கள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட இடங்களில் கொசு உற்பத்தியாகும் இடங்களை களப்பணியாளர்கள் கண்டறிந்து அகற்றுதல், கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் மற்றும் கொசு ஒழிப்பு புகை புரப்பும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தீவிரத் தூய்மைப் பணி மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் கொசுக்கொல்லி மருந்து தெளித்தல், தெருக்கள் மற்றும் வீடுகளில் கொசு ஒழிப்பு புகைமருந்து அடித்தல், உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் மொத்தம் 3,703 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பணியாளரும் நாளொன்றுக்கு 80 முதல் 100 வீடுகளை களஆய்வு மேற்கொள்கின்றனர்.
அதன்படி நேற்று, திருவொற்றியூர் மண்டலம், 5வது வார்டுக்கு உட்பட்ட பாரத் நகர், 1வது தெரு, மாதவரம் மண்டலம், 29வது வார்டுக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் நகர், ராயபுரம் மண்டலம், 55வது வார்டுக்கு உட்பட்ட போர்ச்சுகீஸ் சர்ச் தெரு, அம்பத்தூர் மண்டலம், 84வது வார்டுக்கு உட்பட்ட சிவானந்தா காலனி, 89வது வார்டுக்கு உட்பட்ட முகப்பேர், கலெக்டர் நகர், அண்ணாநகர் மண்டலம், 108வது வார்டுக்கு உட்பட்ட கில் கிறிஸ்ட் அவென்யூ உள்ளிட்ட இடங்கள்.
தேனாம்பேட்டை மண்டலம், 121வது வார்டுக்கு உட்பட்ட கணேசபுரம், வளசரவாக்கம் மண்டலம், 144வது வார்டுக்கு உட்பட்ட எம்.எம்.டி.ஏ. காலனி, 6வது பிளாக், 147வது வார்டுக்கு உட்பட்ட பாக்யலட்சுமி நகர், 1வது தெரு, 153வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.இ.நகர், 1வது தெரு, அடையாறு மண்டலம், 168வது வார்டுக்கு உட்பட்ட எம்.பி.சி. விடுதி தொழிலாளர் குடியிருப்பு, 172வது வார்டுக்கு உட்பட்ட ஏ.எல்.முதலி தெரு, 173வது வார்டுக்கு உட்பட்ட கால்வாய் கரை சாலை, காந்தி நகர், 174வது வார்டுக்கு உட்பட்ட பெசன்ட் நகர், 4வது குறுக்குத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் தோறும் கொசு ஒழிப்புப் புகை பரப்பும் பணி மற்றும் மழைநீர் வடிகாலில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
