மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தின் மஜல்கான் – கர்ஹி சாலையில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்ற பிரல்ஹாத் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி சுனிதா மீது அதிவேகமாக வந்த கார் நேருக்கு நேர் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பிரல்ஹாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுனிதாவும் உயிரிழந்தார். இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
கார் மோதி தம்பதி பலி:.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி
