நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருவதால், தினசரி விலை நிர்ணயம் செய்வதை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 7ஆம் தேதி ரூ.6.70 ஆக இருந்த முட்டை கொள்முதல் விலை, படிப்படியாகக் குறைந்து தற்போது ரூ.5.40 ஆக உள்ளது. கடந்த 13 நாட்களில் மட்டும் ரூ.1.30 சரிந்துள்ளது. வரும் நவம்பர் 28ஆம் தேதி வரை தற்போதைய விலையே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் நிறுத்தம்!
