திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மத்திய பேருந்து பகுதியில் சோதனை செய்தபோது அங்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த திருவரங்கம் அல்லி துறையை சேர்ந்த பாரதி (வயது 20) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர்.
இதே போன்று திருச்சி ஓடத்துறை பாலம் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்த சிந்தாமணி பகுதியை சேர்ந்த ரஷீத் பாஷா (வயது 27) விஸ்வநாத் (வயது 24 )ஆகிய இரண்டு பேரை கோட்டை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோன்று திருச்சி பாலக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆலம் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த குட்செட் ரோடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது
திருச்சி தென்னூர் உக்கிரா மகா காளியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தில்லைநகர் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்கு இதயாத் நகரை சேர்ந்த அக்பர் அலி (வயது 22)மற்றும் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (வயது 23) ஆகிய இருவரும் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று உறையூர் போலீஸ்சரகத்துக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன் (வயது 26) என்ற ரவுடியை உறையூர் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளனர். இதேபோன்று திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராம்ஜிநகர் பெட்ரோல் பங்க் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி என்பவரது மனைவி அபிராமி (வயது 34 )என்பவரை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார். அவரிடம் இருந்து 160 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேற்கண்ட கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
