திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகம் பஞ்சப்பூர் பஸ் நிலையம் வாட்டர் டேங்க் அருகில் புதுக்கோட்டை ரிங் ரோட்டில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு அதிரடியாக விரைந்து சென்று கஞ்சா விற்றவரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் புங்கனூர் காந்திநகரை சேர்ந்த மாயகிருஷ்ணன் (42) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம், கஞ்சா விற்ற 3,300 ரூபாய் பணம், 2 கிலோ 300 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பொதுக்கழிப்பிடம் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக தாராநல்லூரை சேர்ந்த வசந்த், தர்மதுரை ஆகிய இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் சிரஞ்சுகள், சலைன் வாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
