நாமக்கல்: நல்லிப்பாளையத்தில் ஜீப் ஒன்று எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் (35), செல்வராஜ் (60), காந்திமதி (55) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த ஜீப், டிவைடரை உடைத்து கொண்டு வந்து காரின் மீது மோதியுள்ளது. ஜீப்பை ஓட்டி வந்த கிசான் (19), காரில் பயணித்த 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
