கரூர் மாவட்டம் நெரூர் காவிரி ஆற்றில் திதி சடங்கு செய்யச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் நரசிம்மபுரத்தைச் சேர்ந்த அருணன் (62), சுரேஷ் (61) ஆகியோர் அண்ணன்-தம்பி ஆவர் .
இவர்களது தாயாருக்கு திதி கொடுப்பதற்காக உறவினரான ஸ்ரீனிவாசன் (64) உள்ளிட்ட 7 பேர் இன்று நெரூர் காவிரி ஆற்றுக்குச் சென்றுள்ளனர்.

இதனை கவனித்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மூவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து, ஆம்புலன்ஸ் மூலம் கரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு.
மேலும், உயிரிழந்த மூவரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திதி சடங்கிற்காகச் சென்ற மூன்று பேர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கரூர் மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
