Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

திருச்சி பாலக்கரை காஜாபேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 39) இவர் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் வேலைக்கு சென்று கடை அருகேஆஞ்சநேயர் கோயில் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தினார்.
அப்பொழுது அங்கு வந்த ஒரு வாலிபர் இருதயராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார்.இந்த சம்பவம் குறித்து இளையராஜா பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் தான் இளையராஜா யிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்தது தெரிய வந்தது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சித்து (வயது 21), இவர் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பதும் தெரிய வந்தது இதையடுத்து போலீசார் சித்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!