உறையூரில் பூசாரி மனைவியை தாக்கிய ரவுடி கைது
திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன்
இவர் அதே பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பூசாரி ஆக உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உறையூர் கீழ கல் நாயக்கன் தெருவை சேர்ந்த ரவுடி அப்பாஸ் என்கிற பாலகுமார்.29 என்பவர் குடிபோதையில் கோவிலுக்கு சென்றார்.
இதைக் கண்டு மணிமாறன் அவரை கண்டித்தார். இந்த முன் விரோதத்தில் அங்கே நின்று கொண்டிருந்த மணிமாறனின் மனைவி ஆனந்த நித்யாவை ரவுடி தாக்கியதாக கூறப்படுகிறது இது பற்றி அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவுடி அப்பா சை உறையூர் போலீசார் கைது செய்தனர்.
கோவில் உண்டியல் கோட்டை உடைத்து பணம் திருட்டு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் சின்கோ காலனி பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திருச்சி கிராப்பட்டி இரண்டாவது கிராஸ் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த குகன் சுந்தர் வயது 29 இருந்து வருகிறார் இவர் வழக்கம் போல் இரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார் பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மரபு நபர்கள் கோவில் முன்பக்க கதவு கூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த 30 ஆயிரம் பணத்தை திருடி செல்வது தெரிய வந்தது இது குறித்து புதன் சுந்தர் கொடுத்த புகாரின் அடிப்படையில் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
