நீலகிரி மாவட்டம் மசினகுடி சீகூர் பாலம் அருகே சாலையின் இருபுறமும் நோட்டமிட்டு சாலையை கடந்த புலி…
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனப்பகுதியில் மசனகுடி பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சமீபகாலமாக வனப்பகுதியிலிருந்து அடிக்கடி காட்டு யானைகள்,புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையை கடந்து செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மசனகுடி சீகூர் பாலம் அருகே புலி ஒன்று உலா வந்தது. அப்போது சாலையின் இருபுறமும் நோட்டமிட்டு சாலையை கடந்து வனப்பகுதிக்கு சென்றது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் மசனகுடி உதகை சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடனும் வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யும் வகையில் பயணிக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
