Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காங்கிரஸுடன் இணைகிறது தமாகா: ஜி.கே.வாசன் உறுதி

காங்கிரஸுடன் இணைகிறது தமாகா: ஜி.கே.வாசன் உறுதி

தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) மீண்டும் காங்கிரஸுடன் இணைவதை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நாளிதழ் பேட்டியில் உறுதி செய்துள்ளார். பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், இந்தியாவிலேயே மிகப் பெரிய கட்சி காங்கிரஸ்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும், மக்களுக்கு நன்மை செய்யும் இயக்கங்களுக்குத் தமாகா எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் கூறினார். அந்த வகையில் காங்கிரசுடன் இணைந்து மக்களுக்குச் சேவையாற்றத் தமாகா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

error: Content is protected !!