Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் TNCSC சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

கரூரில் TNCSC சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

கரூர் TNCSC சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்புச் சங்கம் சார்பில், ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்டோர் போராட்டம்.

கரூர் TNCSC சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்புச் சங்கம் சார்பில், ஆறு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ளார் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமை தூக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சங்க அங்கீகாரத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், தொழிலாளர்களின் பெயர்களை வருகைப் பதிவேட்டில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக TNCSC தலைமை நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, ஆறு அம்சக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!